SNCF அதிகரித்து வரும் பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய போதுமான TGV ரயில்கள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொள்கிறது.
இதை சமாளிக்க, சேவையின் இறுதிக்கட்டத்தை எட்டிய ரயில்களின் ஆயுளை நீட்டிக்கும் பெரிய திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.
மொத்தம் 100-க்கும் மேற்பட்ட ரயில் தொகுதிகள் 600 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் புதுப்பிக்கப்பட்டு, 2 முதல் 15 ஆண்டுகள் வரை கூடுதலாக இயக்கப்பட உள்ளன. TGV M தாமதமானதும் இந்த முடிவுக்கு காரணமாகும். பரிசுக்கு அருகிலுள்ள Technicentre du Landy உள்ளிட்ட தொழில்நுட்ப மையங்களில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு அமைப்புகள், பிரேக்குகள், மின்கம்பிகள், கூரை மற்றும் இயந்திரப் பகுதிகள் முழுமையாக பரிசோதித்து புதுப்பிக்கப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படாத உதிரிபாகங்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்ட சில TGV-களிலிருந்து பெறப்படுகின்றன. இதன் மூலம் ரயில்கள் பாதுகாப்பாக மேலும் பல ஆண்டுகள் இயக்கப்பட முடியும்.
இந்தத் திட்டம் சேவை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், 2050-க்குள் நிகர CO₂ வெளியீட்டை பூஜ்யமாக குறைப்பதற்கும் உதவுகிறது. 2033-க்குள் TGV சுமார் 15% அதிகரிக்கும் என SNCF மதிப்பிடுகிறது.

