“நெடுந்தாரகை” பயணிகள் படகில் பெருமளவான மதுபானம் : கடற்படையினரின் செயலால் பயணிகள் விசனம்!
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) மாலை நெடுந்தீவு நோக்கிப் பயணித்த “நெடுந்தாரகை” பயணிகள் படகில், கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை (Beer Cans) ஏற்றிச் சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்துப் படகில், கடற்படையினர் இவ்வாறான அதிகப்படியான மதுபானங்களை வெளிப்படையாக ஏற்றிச் சென்றமை பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் இத்தகைய செயற்பாடுகள் அனுமதிக்கப்படக் கூடாது எனச் சுட்டிக்காட்டும் பயணிகள், இது குறித்து அங்கிருந்த பொலிஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.


