47ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி-கமல்
தமிழ் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது!
இந்திய சினிமாவின் இரு துருவங்களான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்ற உள்ளனர்.
இயக்கம்: பிளாக் பஸ்டர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்தப் பிரம்மாண்ட கூட்டணியை இயக்குகிறார்.
தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மூவீஸ் (Red Giant Movies) நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இசை: ரொக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
சிறப்புப் புரோமோ: பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களை அதிரச் செய்து வருகிறது.
கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் இந்த ‘பாக்ஸ் ஆபீஸ்’ மன்னர்கள் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் திரும்புகிறதா?!”

