குமார் குணரட்னத்தின் முக்கிய குற்றச்சாட்டுகள்

குமார் குணரட்னத்தின் முக்கிய குற்றச்சாட்டுகள்

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம், இன்று (பெப்ரவரி 21, 2026) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு அவா் அரசின் புதிய சட்ட முயற்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளாா்.

அரசாங்கம் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, இன்னும் வீரியம் மிக்க புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களைக் கட்டுப்படுத்த தற்போதைய சட்டங்களில் போதுமான ஏற்பாடுகள் இல்லை என அரசு கருதுகிறது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதைக் காட்டிலும், போராட்டங்களில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கோடே “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” கொண்டுவரப்படுகிறது என அவா் தொிவித்துள்ளாா்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், முன்னைய ஆட்சிக்காலத்தில் இதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பல துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை குணரட்னம் நினைவுபடுத்தினார்.

தேர்தலின் போது “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம்” என வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதைவிடப் பயங்கரமான ஒரு சட்டத்தை அமுல்படுத்த முயல்வது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் மக்கள் போராட்டங்களை முழுமையாகத் தடுக்க முடியாது என்பதால் தான், அரசைப் பாதுகாக்கும் போர்வையில் இந்தப் புதிய சட்டமூலத்தை அவர்கள் கையிலெடுக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு நகர்வு.” என அவா் தொிவித்துள்ளாா்.

Recommended For You

About the Author: admin