இந்திய திரையிசை உலகின் ‘இசைக்குயில்’ என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, தனது 88-வது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் அவர் காலமான செய்தி, இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ். ஜானகியின் மறைவு குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ். ஜானகி. பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவரது மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

