இந்தியா – இலங்கை உயர்மட்டக் கூட்டம்

இந்தியா – இலங்கை உயர்மட்டக் கூட்டம்

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று (பெப்ரவரி 21, 2026) கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மீள்நிர்மாணப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை அமைச்சர்களான வைத்தியா் அனில் ஜெயந்த பெர்னாண்டோ , தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்ஆகியோா் தலைமை தாங்கினா்.

இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பிந்தைய மீள்நிர்மாணப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 350 மில்லியன் டொலர் சலுகைக்கால கடன் மற்றும் 100 மில்லியன் டொலர் நன்கொடை) திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதாகும்.

இந்த நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும்

சேதமடைந்த வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல், சூறாவளியால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைக் கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,

விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள குறுகிய கால பாதிப்புகளை நிவர்த்தி செய்தல், எதிர்கால இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்துதல் ஆகியன குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டுளன..

 

Recommended For You

About the Author: admin