சீனாவின் அதிரடி திட்டம்!
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அழிக்க புதிய ஆயுதம்!!
சீன (China) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய ஆயுதம், ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் கூட்டத்தை அழிக்கக்கூடிய திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இது விண்வெளிப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.
அதிக சக்திவாய்ந்த மைக்ரோவேவ் (Microwave) கதிர்வீச்சை உருவாக்கும் சிறிய ஆற்றல் ஜெனரேட்டரை சீன (China) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த கதிர்வீச்சு செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு குறைந்த செலவில் ஒரு மாற்றாக இந்த ஆயுதம் கருதப்படுகிறது.
இந்த ஆயுதத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது சிறியதாக இருப்பதால் டிரக்குகள், விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் கூட பொருத்த முடியும். இதற்கு TPG1000Cs என பெயரிடப்பட்டுள்ளது. இது நான்கு மீட்டர் (13 அடி) நீளமும் ஐந்து டன் எடையும் கொண்டது. மேலும் இது ஒரு நிமிடத்திற்கு 200,000 துடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது.
📡🛰ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்களை ஏன் குறிவைக்கிறார்கள்?
ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்கள் உக்ரைன் (Ukraine) போரில் முக்கிய பங்கு வகித்தன. உக்ரைன் (Ukraine) இராணுவம் இந்த செயற்கைக்கோள்களை பயன்படுத்தி தகவல் தொடர்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் ரஷ்யாவுக்கு (Russia) பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்கு (USA) ஒரு முக்கியமான சொத்தாக கருதப்படுகிறது.
சீனாவுக்கும் (China) அமெரிக்காவுக்கும் (USA) இடையே விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு போட்டி நிலவி வருகிறது. எனவே, ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்களை அழிப்பதன் மூலம் அமெரிக்காவின் (USA) விண்வெளி திறனை குறைக்க சீனா (China) திட்டமிட்டுள்ளது.
📡🛰விண்வெளிப் போர் அபாயம்!
இந்த ஆயுதம் ஒருபுறம் அமெரிக்காவை (USA) அச்சுறுத்தினாலும், மறுபுறம் விண்வெளியில் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில், செயற்கைக்கோள்களை அழிப்பது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கும். இது மற்ற செயற்கைக்கோள்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
இது குறித்து நான்ஜிங் யுனிவர்சிட்டி ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸின் (Nanjing University of Aeronautics and Astronautics) சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ஸ்டார்லிங்க் (Starlink) மெகா கான்ஸ்டெல்லேஷனின் (Megaconstellation) சாத்தியமான இராணுவ பயன்பாட்டு மதிப்பு ரஷ்யா-உக்ரைன் (Russia-Ukraine) மோதலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் விண்வெளியின் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. இது சீனாவின் (China) விண்வெளி பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளனர்.
இந்த ஆயுதம் விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தூண்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தித் தகவல் மூலம் – தி இண்டிபென்டென்ட்.
Source – The Independent.

