விண்வெளியில் ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்! 

விண்வெளியில் ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்!

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் (FCC) விண்ணப்பித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

💡 எதற்காக இத்தனை செயற்கைக்கோள்கள் என்ற கேள்விகள் இடையே, இது வெறும் இணைய சேவைக்காக (Starlink) மட்டும் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தரவு மையங்கள் (Orbital Data Centers): இந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மிதக்கும் ‘சூப்பர் கம்ப்யூட்டர்களாக’ செயல்படும்.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்கான பிரம்மாண்ட கணக்கீட்டுத் திறனை (Computing Power) இவை வழங்கும்.

மேலும் பூமியில் டேட்டா சென்டர்களை குளிர்விக்க அதிக மின்சாரமும் தண்ணீரும் தேவைப்படும். ஆனால் விண்வெளியில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைப்பதோடு, இயற்கையான குளிரும் இருப்பதால் இது மிகவும் சிக்கனமானது.

🔭 இந்த செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 500 கி.மீ முதல் 2000 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன. மனித நாகரிகத்தை அடுத்த நிலைக்கு (Kardashev II level) கொண்டு செல்லும் முதல் படியாக இதை ஸ்பேஸ்எக்ஸ் கருதுகிறது. தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் சுமார் 10,000 செயற்கைக்கோள்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

⚠️ எனினும் விண்வெளி குப்பைகள் (Space Debris) அதிகரிப்பதற்கும், விண்வெளி ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனாலும், விண்வெளி தான் எதிர்காலத் தொழில்நுட்பத்தின் தளம் என்பதில் மஸ்க் உறுதியாக இருக்கிறார்.

உங்களுடைய கருத்து என்ன? விண்வெளியில் இத்தனை செயற்கைக்கோள்கள் இருப்பது பாதுகாப்பானதா? கீழே கமெண்ட் செய்யுங்கள்!

Recommended For You

About the Author: admin