இலங்கை அண்மைக்காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டை மீட்டெடுக்க பல நாடுகள் நிதியுதவி மற்றும் கடன் உதவிகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே வங்கியின் தலைவர் Masatsugu Asakawa இவ்வாறு தெரிவித்துள்ளார்.