அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர்!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதனை தவிர்க்கும் வகையில் இம்முறைய சுதந்திர தின அணி வகுப்புக்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 40 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகள் மற்றும் ஒத்திகை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இம்முறை விமான சாகசங்களுக்காக 3 விமானங்கள் மாத்திரமே பயன்படுத்தவுள்ளோம். கடந்த காலங்களில் 19 விமானக்ள பயன்படுத்தப்பட்டிருந்தன. தேசியக்கொடியை ஏந்திச் செல்வதற்காக 3 விமானங்களும் 3 ஹெலிகொப்டர்கள் மாத்திரமே இம்முறை நாம் பயன்படுத்தவுள்ளோம்.

இராணுவ அணிவகுப்புக்களை பொருத்தவரை 1873 பேர் பங்கேற்கவுள்ளனர். கடந்த ஆண்டை விட 1500 பேர்
இராணுவ அணிவகுப்பில் இருந்து குறைக்கப்பட்டுள்ளனர் இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முப்படைகளின் கவச வாகனங்கள் நாம் பயன்படுத்தவில்லை.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் 25 துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்” இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin