வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை ஒன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸாருக்கும் நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி மாற்றி கலப்படம் செய்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கடை உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.