மருதமுனை -பாண்டிருப்பு கடல் பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என எனவும் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது.

Recommended For You

About the Author: admin