மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த இன்று (20) முதல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த பதவிக்கு நிரந்தரமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வெற்றிடத்துக்கு மறு அறிவித்தல் வரையில் கடமையாற்றுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான சமுத்திரஜீவா நியமிக்கப்பட்டுள்ளார்.