மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக திசர இரோஷன நாணயக்கார டிசம்பர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin