கிழக்கு மாகாண சபையின் கலாசாரத் திணைக்களத்தினால், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர். தமிழ் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.