75 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை!

நாட்டில் இன்று கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதற்கிடையில், மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நாளை காலை சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin