வெருகல் பகுதியில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பதாகை!
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா எதிர்காலத்தில் அப்பகுதியில் மதஸ்தலங்கள் வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 01.01.2025 அன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் மற்றொரு பாரம்பரிய தமிழர் பிரதேசம் குறித்த திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.