பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆவார்.
46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவராக ஜீவன் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவை குழுவின் தலைவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பின்னர் இந்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது