2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, நேற்றைய தினமும் (05) இன்றையதினமும் (06) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இன்றைய தினம் விவாதம் முடிவடைந்ததும் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.