கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திற்கான பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் -0.8 வீதமாக இருந்த பணவீக்கம் நவம்பர் மாதத்தில் -2.1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் நவம்பரில் 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதத்தில் -1.6 சதவீதமாக இருந்த உணவு அல்லா பணவீக்கம், இந்த மாதத்தில் -3.3 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.