நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக சமீபத்தில் இருந்தார்.
இந்த ஆவணப்படத்தில் 3 வினாடி காட்சியாக “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் உள்ள பாடலை பயன்படுத்த நடிகர் தனுஷிடம் NOC கேட்டு இரண்டு வருடமாக காத்திருப்பதாகவும், அதற்கு காப்பிரைட்ஸ் ரூபாய் 10 கோடி தருமாறு தனுஷ் கேட்டதாகவும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த கடிதம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த மோதலைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்து, இயக்கும் “இட்லி கடை” திரைப்படத்தை ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், நடிகை நயன்தாராவும் தனது ஆக்சன் திரில்லர் படமான “ராக்காயி” படத்தை அதே நாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.