கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த 18 ஆம் திகதி கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில், தூதுவரைச் சந்தித்த ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று கீய் ஜென்ஹோங் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்து, மாகாண அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் உட்பட இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கமும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநரும் கடுமையாக உழைப்பார்களென தாம் உறுதியாக நம்புவதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
அதற்குத் தேவையான ஆதரவை வழங்க, சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை ஹிங்குரான சீனி தொழிற்சாலைக்கு சீனாவின் தொழில்நுட்ப உதவியை சீன அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தனது அழைப்பை ஏற்று வருகை தந்த தூதுவருக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தில் பல்லின மக்கள் வாழும் மாகாணமாக இருப்பதால், அதன் தேசிய ஒருமைப்பாடும், வேற்றுமையும் எமது பலமாகும் எனவும் சீன அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ச்சியாகத் தேவைப்படுவதாகவும் மாகாணத்தின் திட்டங்களுக்கு சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் ஆளுநருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு, செங்கலடி களுவங்கேணி கிராம சேவையாளர் பிரிவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மீனவக் குடும்பங்களுக்கு சீன அரசாங்கத்தால்
வழங்கப்பட்ட உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
சீன அரசாங்கத்தினால், மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஊடாக, வழங்கப்பட்ட உலருணவுப் பொருட்களை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு சென்கொங் அவரது பாரியாருடன் இணைந்து கையளித்தார்.
சுமார் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
களுவங்கேணி பிரதேச மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சீன அரசாங்கம் 4 மில்லியன் ரூபா நிதியினையும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.