கிளிநொச்சி – பெரிய பரந்தன் வட்டாரத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
பெரிய பரந்தன் வட்டார இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் சு. யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவித்தார்.
பெரிய பரந்தன் வட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.

