மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான் 46,438 வாக்குகளை பெற்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் 48018 வாக்குளை பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் 42,273 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் 60041 வாக்குளை பெற்றும் அம்பிகா சாமுவேல் 58201 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
அதுபோன்று இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிகள் இம்முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்