ஸ்பெயின் ஸரகோஸா நகருக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்துள்ளது.
இச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதோடு, இரண்டு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறித்த காப்பகத்தில் மறதி நோய் மற்றும் பிற மன நலப் பிரச்சினைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 82 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், இத் திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது