பேஸ்புக்கில் பொதுத்தேர்தல் தொடர்பில் பதிவுகளை இடுவோரின் கவனத்துக்கு!

பொதுத் தேர்தல் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் 5 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிரான தவறான பிரசாரம் மற்றும் பாரபட்சம் தொடர்பாக கண்டறியப்படவுள்ளன.

சமூக வலைதளங்களில் இருந்து இதுபோன்ற பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் மோசமான பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: admin