11 ஆம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த குழந்தை

இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள கிராமமொன்றிலுள்ள அரசப் பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயின்றுவந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியை உடனடியாக பள்ளிப் பாளையம் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் மாணவியை பரிசோதனை செய்ததில் அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தமையும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக அம் மாணவியை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரித்ததில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவினர் ஒருவர் மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் தெரிய வந்துள்ளது.

குறித்த உறவினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர்.

Recommended For You

About the Author: admin