பசறை – அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 10 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அம்பத்தன்ன பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த இருவரும் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் 10 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
17 வயதுடைய சிறுமியின் சகோதரன் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.