நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விசேட பாடசாலை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் நவம்பர் 09ஆம் திகதி சனிக்கிழமை இயங்கும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சின் அறுவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.