சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்குதல்: தகவல் வழங்கியவரை தேடி விசாரணை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய சந்தேகநபரை தேடி தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 29ஆம் திகதி அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் மூலம் தொலைபேசி அழைப்பு விடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், சாவகச்சேரி நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த தொலைபேசி அழைப்பை வழங்கிய நபர் யார் என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸாரை தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்த தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin