2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று (24) முதல் பகிரங்கப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.