சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் வியூக கூட்டம்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் யாழ்., கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோரின் தேர்தல் வியூக கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான கஜதீபன் உள்ளிட்டோர் தேர்தல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

இதில் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உளளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்டத்தினர் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN