ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே இராஜிநாமா
ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து ஐந்து ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியவர்களாவர்.