வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர், ஜப்பானிய பிரதியமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், அமைச்சர் அலி சப்ரி ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி உட்பட பல முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, வெளிவிவகார அமைச்சருடன் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.