பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
எதிர்கட்சியான தொழிற் கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ஸின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது கன்சர்வேற்றீவ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இத் தகவல் வெளியாகியுள்ளது
எவ்வாறாயினும், அடுத்து ஆட்சிமைக்கும் அரசாங்கம், பொருளாதாரத்தை சீரமைக்கும் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்களை நம்ப வைப்பதில் பவுண்ஸ் நாணயத்தின் எதிர்காலம், தங்கியிருக்கும் என அவதானிகள் கூறுகின்றனர்.
ஆளும் கன்சர்வேற்றீவ் கட்சியின் கீழ் ,அரசியலால் உந்தப்பட்ட வர்த்தகர்கள் நீண்ட கால நாணய ஏற்ற இறக்கத்தின் மீது பந்தயம் கட்டுவதால், 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்புக்குப் பின்னர் ஸ்ட்ரேலிங் பவுண்ட் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் பிரித்தானிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றால், கன்சர்வேற்றீவ் பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என 20இற்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“நம்பிக்கை குறைவான அரசியல் சூழ்நிலை ஸ்டெர்லிங் பெறுமதியை மிகவும் பலவீனப்படுத்தும் மற்றும் நிலையற்றதாக மாற்றும் என பல்கலைக்கழக நிதிப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் பிரித்தானியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த அரசாங்கத்தின் பதிலை முதலீட்டாளர்கள் ஸ்ட்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியை கொண்டு மதிப்பிடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.