நள்ளிரவு முதல் லிட்ரோ,லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிரோம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 3790 ரூபாய்.

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1525 ரூபாய்.

2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

அத்துடன் நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைக்கப்படுவதாக அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 3680 ரூபாய்.

5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1477ரூபாய்க்கு விற்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin