‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா.
இத் திரைப்படத்தைத் தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
அத்தோடு அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரலாற்றுப் படங்கள் என்றால் அது அனுஷ்காவுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு தனது அபரிமிதமான நடிப்பால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
42 வயதான அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்? எப்போது திருமணம்? என்ற கேள்வியை அனைவரும் கேட்க, பாகுபலியில் ஜோடியாக நடித்த பிரபாஸூம் அனுஷ்காவும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில்,தற்போது 45 வயதான கன்னட சினிமா தயாரிப்பாளரை அனுஷ்கா திருமணம் செய்யவிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.