இலங்கை வரும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் ஆகியவற்றில் களமிறங்கும் வகையில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் காலியிலும், இருபதுக்கு 20 தொடர் ஹம்பாந்தோட்டையிலும் நடைபெறவுள்ளது.

Oruvan

Recommended For You

About the Author: admin