சொல்வதை கேட்காமல் TIKTOKகில் வீடியோ போட்ட மனைவி: கணவன் வைத்தியசாலையில்

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் குறித்த நபரின் மனைவி வேலைவாய்ப்புக்காக வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த பெண், தொடர்ச்சியாக TIKTOK சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

டிக்டொக் சமூக வலைத்தளத்தில் வீடியோக்கள் பகிர்வது கணவருக்கு பிடிக்காத காரணத்தால், அவர் எச்சரித்துள்ளார்.

ஆனாலும், சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வீடியோக்களை தொடர்ந்து அவர் பதிவேற்றி வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதையடுத்தே, கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளான கணவர் வலிநிவாரணி மாத்திரைகளை அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin