இடம் கிடைக்கவில்லை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டநாயகனான காலின் முன்ரோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதான காலின், நியூசிலாந்து அணிக்காக 123 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார்.

இறுதியாக 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார்.

இதன் பின் நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என நினைத்திருந்த அவருக்கு அந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் டி20, டி10 ஆகிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டீஸில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இப்பொழுதும் இவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

இவ்வாறிருக்க இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறப்போவதை அறிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin