கமலுக்கு மகனாக சிம்பு?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தக் லைப்.

இத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

த்ரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடிக்கும் இத் திரைப்படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் படத்திலிருந்து விலகினர்.

இதனால் இந்த வெற்றிடத்துக்கு நடிகர்களைத் தேடியபோது சிம்புவை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்தது.

இந்நிலையில் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்படிப்பு டில்லியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

Recommended For You

About the Author: admin