இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் அபார வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று முந்தினம் (17) இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனையை பதிவுசெய்தது.
இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணி பெற்றுகொண்ட 302 ஓட்ட வெற்றி இலக்கை கடந்து தொடரை கைப்பற்றியது.
இதில் இலங்கை அணித்தலைவர் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிபெற செய்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.