உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு அமெரிக்க தூதரக துணைத் தலைவர் டக்ளஸ் இ.சொனெக்

வடக்கு – கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு, உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தலைவர் டக்ளஸ் இ. சொனெக் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க கோனருக்கு இன்று வருகை தந்த போது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்குக்கு சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளோம். இன்று காலை கிளிநொச்சிக்கு சென்ற பின்னர் இப்போது யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம்.

இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக்கூறினர்.

இளைஞர் – யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர். இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்

Recommended For You

About the Author: admin