மண்ணெண்ணெய் 26 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாய் ஆகும்.

95 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை எட்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 456 ரூபா ஆகும்.

லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 363 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை ஏழு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 468 ரூபா ஆகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்று 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாகும்

Recommended For You

About the Author: admin