இந்திய கொடியுடன் ஓடிய அக்ஷய் குமார்: பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம்!

‘படே மியான் சோட்மியான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் கொடியுடன் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் 75வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல பொலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் குடியசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

‘படே மியான் சோட்மியான்’ படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்கள்.

ஜோர்டான் நாட்டு கடற்கரையில் இருவரும் இன்று அதிகாலை பெரிய அளவிலான மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு உற்சாகமாக ஓடியுள்ளனர்.

பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம்

பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம் பாடலுடன் ஜோர்டான் கடற்கரையில் இருவரும் ஓடியவாறு எடுக்கப்பட்ட வீடியோ நாட்டின் தேச உணர்வைத் தூண்டியுள்ளது.

இந்த வீடியோவை ‘எக்ஸ்’ தள பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்து, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளர்.

Recommended For You

About the Author: admin