யாழ்ப்பாணத்துக்ககான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கொள்ளவுள்ளார்.
இதனடிப்படையில், தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா நாளை யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில், இடம்பெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காகவே அவர் அவர் அங்கு செல்லவுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு குறித்த பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.