பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஏலியன்கள் என கூறப்பட்ட ஒரு ஜோடி உடல்கள் வேற்றுகிரகவாசிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானப் பகுப்பாய்வின் பிரகாரம் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் பெருவில் உள்ள சட்ட மருத்துவம் மற்றும் தடயவியல் மருத்துவக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஃபிளவியோ எஸ்ட்ராடா கருத்து தெரிவிக்கையில்,
“ஏலியன் என அழைக்கப்பட்ட குறித்த சடலங்கள் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள்“ என்று கூறுகிறார்.
சமீபத்தில் ஊடகப் பரப்புரையை உருவாக்கி, நீளமான தலைகள் மற்றும் மூன்று விரல்களைக் கொண்ட இந்த இரண்டு சிறிய மம்மி போன்ற அமைப்புடைய பொம்மைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.