போலாந்து தம்பதி தங்கியிருந்த வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் அறையில் வைக்கப்பட்டிருந்த 100 அமெரிக்க டொலர், 32 ஆயிரத்து 250 இலங்கை ரூபா என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏவா மோனிகா மெஜேவிஸ்கா என்ற 47 வயதான போலாந்து பெண் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் சுற்றுலா விசாவில் நேற்று இலங்கை வந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சுற்றுலா ஹோட்டலில் ஊழியர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.