ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைக்கும் வேலைத்திட்டத்தை கைவிட அந்த கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இதற்கு கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையே இதற்கு காரணம்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இணைத்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுயாதீனமாக இயங்க தீர்மானித்திருந்ததாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால், உட்கட்சி மோதல் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதற்காக புதிதாக கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.