பருத்தித்துறையில் பேருந்து உரிமையாளர் மீது வாள் வெட்டு

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து பேருந்து உரிமையாளர் ஒருவரின் மீது இன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இன்று அதிகாலையில் முகமூடி அணிந்து உந்துருளியில் வந்தவர்களால் பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த சாரதியை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin